×

மிக்ஜாம் புயல் எதிரொலி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைத்து சென்னைக்கு உதவிக்கரம் நீட்டும் பிற மாவட்டங்கள்!!

சென்னை : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு பல மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. சென்னையில் புறநகர் பகுதிகளில் பல அடுக்குமாடி குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு பல மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் பாட்டில்கள், பால் பவுடர் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சேலம் மாவட்ட நிர்வாகம் சென்னைக்கு அனுப்பி வைத்தது. விடிய விடிய 5,000 பைகளை நிவாரண பொருட்கள் நிரப்பப்பட்டு லாரி மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பெரு மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்களுக்கு ஈரோட்டில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் நிர்வாகம் முதற்கட்டமாக போர்வை, பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை லாரி மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தது. திருப்பூரில் இருந்து தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு, நிவாரணமாக ரூ.3 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருட்கள், மருந்து, துணி வகைகள் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமாவிடம் சமூக அமைப்புகள் ஒப்படைத்தது. மிக் ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 3 லாரிகளில் நிவாரணப் பொருட்களைவேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அனுப்பி வைத்தார்.

 

The post மிக்ஜாம் புயல் எதிரொலி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைத்து சென்னைக்கு உதவிக்கரம் நீட்டும் பிற மாவட்டங்கள்!! appeared first on Dinakaran.

Tags : Mikjam ,Chennai ,Chennai… ,Migjam ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...